Vivo சைலண்ட் சம்பவம்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி60 லைட் 5ஜி (Vivo V60 Lite 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. AMOLED டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், ஐபி65 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ வி60 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo V60 Lite 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி60 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்ஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் உலகின் முதல் மீடியாடெக் டைமன்சிட்டி 7360-டர்போ (MediaTek Dimensity 7360-Turbo) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் போன்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். வைட்டலிட்டி பிங்க் (Vitality Pink), டைட்டானியம் மிஸ்ட் ப்ளூ (Titanium Mist Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
6500mAh பேட்டரி உடன் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, டூயல் ஸ்பீக்கர்கள், NFC, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.
ஆனால் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி60 லைட் 5ஜி போனின் விலை $460 (இந்திய மதிப்பில் ரூ.40,837)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் $495 (இந்திய மதிப்பில் ரூ.43,947)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








