தாராளமா வெயிட் பண்ணலாமே.. இதுதான் புது Vivo 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ வி60 லைட் 5ஜி (Vivo V60 Lite 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மாதங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் விவோ வி60 லைட் 5ஜி படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
பஞ்ச்-ஹோல் (punch-hole) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது புதிய விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ வி60 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo V60 Lite 5G Specifications): 6.7-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek's Dimensity 7300 chip) உடன் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் மாலி கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் மூலம் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி60 லைட் 5ஜி வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ வி60 லைட் 5ஜி போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். அதேபோல் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளது.
அதேபோல் விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: passionategeekz, gizmochina


Click it and Unblock the Notifications








