சத்தமின்றி புதிய Vivo போன் அறிமுகம்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தற்போது விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் விவோ வி60 லைட் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புது விவோ வி60 லைட் 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த 4ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி60 லைட் 4ஜி போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி60 லைட் 4ஜி அம்சங்கள் (Vivo V60 Lite 4G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி60 லைட் 4ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்ஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 2 (Snapdragon 6s 4G Gen 2) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் போன்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மெமரி கார்டை பயன்படுத்த ஒர மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய விவோ போன்.
6500mAh பேட்டரி உடன் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
50எம்பி சோனி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் ஸ்பீக்கர்கள், NFC, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.
ஆனால் இந்த போன் தற்போது பனாமாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் விலை இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் விலை அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








