Home
Mobile

அடுத்த Vivo போன் ரெடி.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி60 லைட் 4ஜி (Vivo V60 Lite 4G) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த புதிய போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அடுத்த Vivoபோன் ரெடி.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா..  எந்த மாடல்?

விவோ வி60 லைட் 4ஜி அம்சங்கள் (Vivo V60 Lite 4G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் தரமான ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (Snapdragon 685 chipset) வசதியுடன் இந்த புதிய விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது,

பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி சோனி எம்எம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய விவோ போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

6500mAh பேட்டரி உடன் விவோ வி60 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும். உள்ளது. அதேபோல் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Photo Credit: Xpertpick.com/ Sudhanshu Ambhore

Best Mobiles in India

English summary
Vivo V60 Lite 4G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X