ஆகஸ்ட் வரை காத்திருப்போம்.. 6500mAh பேட்டரி.. 16ஜிபி ரேம்.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ வி60 (Vivo V60) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த விவோ வி60 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது.
அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி விவோ வி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓர்ஜின்ஓஎஸ் (OriginOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விவோ வி60 அம்சங்கள் (Vivo V60 specifications): 6.67-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ வி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் வசதியுடன் இந்த புதிய விவோ வி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனில் உள்ள ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
மேலே குறிப்பிட்டது போல ஓர்ஜின்ஓஎஸ் (OriginOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ வி60 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் மூலம் 4K வீடியோவை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் புதிய விவோ போன் வெளிவரும்.
6500mAh பேட்டரி உடன் விவோ வி60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ வி60 போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








