VIVO போன் ஓனர்களே.. Funtouch OS-க்கு குட்பை.. OriginOS உடன் இந்தியாவிற்கு வரும் முதல் போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) தெரிவித்துள்ளார். அது விவோ வி60 (Vivo V60) ஸ்மார்ட்போன் ஆகும். அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்,கலர் ஆப்ஷன்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த விவரங்களை யோகேஷ் பிரார் லீக் செய்துள்ளார்.
விவோ வி60 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான மேம்படுத்தல்களில் ஒன்றாக - குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் இருக்கும். இது விவோ வி50 மாடலில் நாம் பார்த்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை விட நல்ல மேம்படுத்தல் ஆகும். கூடவே இந்த ஸ்மார்ட்போனில் 6,500mAh பேட்டரி இடம்பெறலாம் என்றும், அது 90W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை விவோ வி60 ஸ்மார்ட்போனில் 50எம்பி சென்சார்கள் இடம்பெறக்கூடும் என்று யோகேஷ் பிரார் கூறுகிறார். வடிவமைப்பை பொறுத்தவரை லீக் ஆன ரெண்டர்கள் ஒரு தனித்துவமான டேப்லெட் வடிவ கேமரா தொகுதிக்குள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை காட்டுகின்றன. அதில் எல்இடி ஃபிளாஷும் உள்ளது
விவோவின் பிராண்டிங் ஆனது பேக் பேனலின் கீழ்-இடது மூலையில் உள்ளது. இது விவோ பிராண்டின் வழக்கமான வடிவமைப்பு மொழியுடன் ஒத்துப்போகிறது. குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மூன்று புதிய வண்ண ஆப்ஷன்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது: மிஸ்ட் க்ரே (Mist Grey), மூன்லிட் ப்ளூ (Moonlit Blue) மற்றும் ஆஸ்பிஷியஸ் கோல்ட் (Auspicious Gold)
எல்லாவற்றை விட முக்கியமாக விவோ வி60 ஸ்மார்ட்போன் ஆனது ஒரிஜின்ஓஎஸ் (OriginOS) உடன் அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் யோகேஷ் பிரார் சுட்டிக்காட்டுகிறார். இது உண்மையாக இருந்தால், இந்திய சந்தையில் ஒரிஜின்ஓஎஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆக விவோ வி60 ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒரிஜின் ஓஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடல் ஆக இருக்கும்.
அதாவது இது விவோவின் தற்போதைய பன்டச் ஓஎஸ்-ல் இருந்து வேறுபட்ட ஒரு புதிய பயனர் அனுபவத்தை வழங்கும். இப்படியாக கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.36,999 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் முன்னோடியான விவோ வி50 ஸ்மார்ட்போனை விட விவோ வி60 மாடல் ஆனது பல மேம்பாடுகளை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தில் விவோ வி50 எலைட் எடிஷன் (Vivo V50 Elite Edition) ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 6000எம்ஏஎச் பெரிய பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் ZEISS உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் (Diamond Shield Glass) மற்றும் ஐபி 68 / ஐபி 69 ரேட்டிங் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. விலை ரூ.41,999 ஆகும்.
விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை, OIS, அல்ட்ரா-வைட் மற்றும் குரூப் செல்ஃபியுடன் கூடிய 50எம்பி ZEISS ஆல்-மெயின் கேமராவுடன் வருகிறது. இது ZEISS மல்டிஃபோகல் போர்ட்ரெய்ட்ஸ் (23mm, 35mm, 50mm), ஏழு ZEISS போர்ட்ரெய்ட் ஸ்டைல்கள் மற்றும் இந்தியாவிற்கான பிரத்தியேக வெட்டிங் ஸ்டைல் போர்ட்ரெய்ட் ஸ்டுடியோ ஆகியவற்றை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 90W பாஸ்ட் சார்ஜிங்குடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 கொண்டு இயங்குகிறது மற்றும் பல வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்கிற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இது ஏஐ ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு (AI Screen Translation), லைவ் கால் மொழிபெயர்ப்பு (Live Call Translation), மேம்படுத்தப்பட்ட சிக்னல் தரத்திற்கான ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink for improved signal quality) மற்றும் புகைப்பட மேம்பாட்டிற்கான ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0) ஆகிய ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








