Home
Mobile

ஆகஸ்ட் 12 உறுதி.. 6500mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தற்போது புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவோ வி60 5ஜி (Vivo V60 5G) ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி60 5ஜி அம்சங்கள் (Vivo V60 5G specifications): ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12 உறுதி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் வசதியுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனில் உள்ள ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.67-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். இந்த போன் மூலம் 4K வீடியோவை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் புதிய விவோ போன் வெளிவரும்.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

ஆகஸ்ட் 12 உறுதி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பிசியஸ் கோல்ட், மிஸ்ட் கிரே மற்றும் மூன்லைட் ப்ளூ நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V60 5G to launch in India on August 12: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X