ஆகஸ்ட் 12 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6500mAh பேட்டரி.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி60 5ஜி (Vivo V60 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் 2025 ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். ஆஸ்பிசியஸ் கோல்ட் மற்றும் மூன்லைட் ப்ளூ நிறங்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ வி60 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம்.
விவோ வி60 5ஜி அம்சங்கள் (Vivo V60 5G specifications): 6.67-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போன் மூலம் 4K வீடியோவை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் புதிய விவோ போன் வெளிவரும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
அதுவும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் வசதியுடன் இந்த புதிய விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனில் உள்ள ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
6500mAh பேட்டரி உடன் விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி60 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








