ஏப்.10 குறிச்சாச்சு.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. UNDER வாட்டர் கேமரா.. 5600mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்!
அல்ட்ரா-ஸ்லிம் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கேமரா, ஐ-குரூப் செல்பீ கேமரா, ஐபி68 + ஐபி69 ரேட்டிங் மட்டுமல்லாமல், அண்டர் வாட்டர் போட்டோகிராபி பீச்சர்களுடன் விவோ வி50இ (Vivo V50e) இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த விவோ வி50இ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை தொடங்க இருக்கிறது. இதுபோக முக்கிய பீச்சர்களையும் விவோ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் மற்றும் கேமரா பிரியர்களுக்கான பீச்சர்களை இந்த போனின் பார்க்க முடிகிறது.

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): இந்த விவோவில் அல்ட்ரா-ஸ்லிம் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Ultra-Slim Quad Curved Display) கிடைக்க இருக்கிறது. ஆகவே, வெறும் 7.3 எம்எம் தடிமனில் எதிர்பார்க்கலாம். பிரீமியம் நைட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபிக்கு ஆரா லைட்டை (Aura Light) பேக் செய்துள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் சோனி மல்டிபோகல் ப்ரோ போர்ட்ராய்டு (Sony Multifocal Pro Portrait) மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது. ஆகவே, ரியர் கேமரா சிஸ்டம் பிரீமியமாகவே இருக்கிறது.
இந்த விவோ வி50இ போனில் ஐ-ஆட்டோ போகஸ் (Eye Auto Focus) மற்றும் குரூப் செல்பீ சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியர் மற்றும் செல்பீ ஷூட்டரில் அண்டர் வாட்டர் போட்டோகிராபி கிடைக்கும்படி வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, IP68 ரேட்டிங்குடன் IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
மெயின் கேமராவின் பீச்சர்களை பார்க்கையில், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா எச்டி ஆன்டி-டிஸ்டோர்ஷன் செல்பீ (Ultra HD Anti-Distortion Selfie) மற்றும் ஃபிலிம் கேமரா மோட் (Film Camera Mode) கிடைக்கிறது. இந்திய பிரியர்களுக்கு ஏற்ப வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டைல் (Wedding Portrait Style) மோட்களும் கிடைக்கின்றன.
பிரீமியமான வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், , டயமண்ட் சீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சனை கொடுக்கிறது. எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Five-Star Drop Resistance) கிடைப்பதால், மழை, காபி போன்ற லிக்விட் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். பிரீமியம் மாடலாக இருப்பதால், ஸ்மார்ட் ஏஐ (Smart AI) வருகிறது.
இதில் ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), லைவ் கால் டிரான்ஸ்லேஷன் (Live Call Translation) போன்ற பீச்சர்கள் வருகின்றன. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle To Search) போன்ற வழக்கமாக பீச்சர்களும் இடம்பெறுகின்றன. பிரீமியம் பேக் பேனலுடன் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் டிசைன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த பீச்சர்களுடன் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) எதிர்பார்க்காலம். மேலும், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,600mAh பேட்டரி வர வாய்ப்புள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








