Home
Mobile

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 5,600mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்றபடியான பீச்சர்களுடன் விவோ வி50இ (Vivo V50e) போன் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நேரத்தில் கேமரா, டிஸ்பிளே, புரொடெக்சன், ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ ஷூட்டர், சோனி ஐஎம்எக்ஸ் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த விவோ வி50இ எப்போது வெளியாகிறது? பீச்சர்கள் எப்படி இருக்கும்? எந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்?

அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவின்றன. அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்போது, கலர், டிசைன், கேமரா மற்றும் ரெசிஸ்டன்ட் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களை பார்ப்போம்.

பின்றானே இவன்.. பட்ஜெட்ல 5,600mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): இந்த விவோ போனில் ஆரா எல்இடியுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera Systen) கிடைக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் + ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட மெயின் கேமரா (மல்டி போகல்) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி ஆட்டோ போகஸ் (Auto Focus) செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த கேமராவில் சோனி மல்டிபோகல் ப்ரோ போர்ட்ராய்டு (Sony Multifocal Pro Portrait), அல்ட்ரா எச்டி ஆன்டி-டிஸ்டோர்ஷன் செல்பீ (Ultra HD Anti-Distortion Selfie), வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டைல் (Wedding Portrait Style), ஃபிலிம் கேமரா மோட் (Film Camera Mode) போன்ற பீச்சர்கள் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த விவோ வி50இ போனில் IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஆகவே, அண்டர் வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) சப்போர்ட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், டயமண்ட் சீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) டிஸ்பிளே புரொடெக்சன், எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Five-Star Drop Resistance) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விவோ வி50இ போனில் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கிடைக்கிறது.

ஸ்மார்ட் ஏஐ (Smart AI) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist), லைவ் கால் டிரான்ஸ்லேஷன் (Live Call Translation) மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle To Search) போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் கலரில் கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களை மட்டுமே விவோ இந்திய நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம். இந்த விவோ வி50இ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் கிடைக்கிறது. 5,600mAh பேட்டரி மட்டுமல்லாமல் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது.

மேலும், 6.77 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.28,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஏனென்றால், விவோ வி50 போன் ரூ.34,000 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, இந்த போன் அதைவிட குறைவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50e With 50MP Camera Launched Soon India Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X