அடடே இந்த கம்பெனி இப்படி ஒரு காரியத்தை செய்யும்னு கனவுல கூட நெனக்கல! வேற லெவல் கேமரா..
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் வெட்டிங் போர்ட்ரெயிட் ஸ்டுடியோ (Wedding Portrait Studio)அம்சத்துடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போர்ட்ரெயிட் ஸ்டுடியோ அம்சம் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த விவோ வி50இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 (IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
குறிப்பாக 6.77-இன்ச் 1.5கே குவாட் கர்வ்ட் அமோலெட்(quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
விவோ வி50இ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் விவோ வி50இ போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
5600mAh பேட்டரி வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி விவோ வி50இ ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








