Home
Mobile

இந்தியாவில் Vivo வி50இ போன் அறிமுகம்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. என்ன விலை? எப்போது வாங்கலாம்?

விவோ (vivo) நிறுவனம் தனது புதிய விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போனை இன்று (2025 ஏப்ரல் 10) அறிமுகம் செய்துள்ளது. சோனி கேமரா, 5600mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி50இ போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி ((MediaTek Dimensity 7300 SoC)) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

இந்தியாவில் Vivo வி50இ போன் அறிமுகம்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்..

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 (IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர ஆரா லைட் (Aura light) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6.77-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 4500 நிட்ஸ் பிரைட்னஸ், டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் புரொடெக்சன் (Diamond Shield Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்ளில் இந்த போனை வாங்க முடியும். மேலும் ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைவ் கால் டிரான்ஸ்லேஷன், ஏஐ எரைசர், சர்க்கிள் டூ சர்ச் போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளன.

IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி50இ போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த அசத்தலான போன் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ வி50இ ஸ்மார்ட்போன் 5600mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். சப்பயர் ப்ளூ (Sapphire Blue), பேர்ல் ஒயிட் (Pearl White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

இந்தியாவில் Vivo வி50இ போன் அறிமுகம்.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்..

குறிப்பாக எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Five-Star Drop Resistance) கொடுக்கிறது இந்த விவோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த
விவோ போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி50இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.30,999-ஆக உள்ளது. தற்போது இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 17-ம் தேதி அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo V50e launched in India: check specification, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X