Home
Mobile

ஏப்ரல் 10 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

அதாவது வெட்டிங் போர்ட்ரெயிட் ஸ்டுடியோ (Wedding Portrait Studio)அம்சத்துடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. பின்பு ஐபி69 ரேட்டிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்குகிறது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

ஏப்ரல் 10 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo 5ஜி போன்..

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 (IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6.77-இன்ச் 1.5K குவாட் கர்வ்ட் அமோலெட்(quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ், ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைவ் கால் டிரான்ஸ்லேஷன், ஏஐ எரைசர், சர்க்கிள் டூ சர்ச் போன்ற தனித்துவமான அம்சங்கள்
இந்த போனில் உள்ளன.

அதேபோல் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் விவோ வி50இ போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

விவோ வி50இ ஸ்மார்ட்போன் 5600mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V50e India launch Date, price, specifications reveled online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X