மார்க்கெட்டே மிரள போகுது.. 80W சார்ஜிங், சோனி கேமரா.. புதிய Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
விவோ நிறுவனத்தின் புதிய விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போனின் புகைப்படம் கூட தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் கேமரா சென்சார்களுக்குக் கீழே ஒரு ரிங் லைட்டும் உள்ளது. குறிப்பாக விவோ எஸ்20 ஸ்மார்ட்போன் போலவே உள்ளது இந்த விவோ வி50இ மாடல். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி50இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
விவோ வி50இ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் 1.5கே குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் IP68/69தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி50இ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 5600mAh பேட்டரி வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சபையர் ப்ளூ (Sapphire Blue), பேர்ல் ஒயிட் (Pearl White) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ வி50இ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய விவோ போன் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ போன் இந்தியாவில்
அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








