நாளை வருகிறது புதிய Vivo போன்.. சத்தமில்லாமல் பழைய 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
இந்தியாவில் நாளை (அக்டோபர் 7) 200எம்பி கேமரா, 6500mAh பேட்டரி, IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் உடன் விவோ வி60இ 5ஜி (vivo V60e 5G) போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வெளியான விவோ வி50இ 5ஜி போனின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி50இ 5ஜி (Vivo V50e 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.28,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.25,757 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

விவோ வி50இ 5ஜி அம்சங்கள் (Vivo V50e 5G Specifications): விவோ வி50இ 5ஜி ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 4500 நிட்ஸ் பிரைட்னஸ், டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் புரொடெக்சன் (Diamond Shield Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC)) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 (IMX882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர ஆரா லைட் (Aura light) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்ளில் இந்த போனை வாங்க முடியும். மேலும் ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைவ் கால் டிரான்ஸ்லேஷன், ஏஐ எரைசர், சர்க்கிள் டூ சர்ச் போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி50இ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த அசத்தலான போன் அறிமுகம் செய்யப்பட்டது.
5600mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ வி50இ 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். சப்பயர் ப்ளூ (Sapphire Blue), பேர்ல் ஒயிட் (Pearl White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன. எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Five-Star Drop Resistance) கொடுக்கிறது இந்த விவோ போன்.


Click it and Unblock the Notifications








