புதுசு ரெடி.. ரூ.3500 ரேட் கட்ல பழசு.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ வி60 (Vivo V60) மாடலானது இன்று (ஆகஸ்ட் 12) வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு அதற்கு முந்தைய மாடலான விவோ வி50 (Vivo V50) மாடலுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், சாம்சங் சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட விவோ வி60 போன் இன்று வெளியாக இருக்கிறது. ஜீஸ் (ZIESS) கேமரா, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 6500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்க இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு லேட்டஸ்ட் பீச்சர்களில் துளியும் குறையில்லாத விவோ வி50 போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.34,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.36,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.40,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.32,999 பட்ஜெட்டிலும், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.34,999 பட்ஜெட்டிலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.38,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.1,500 பேங்க் தள்ளுபடியை கூடுதலாக பெற்று கொள்ளலாம்.
ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2,000 விலை குறைப்பு மற்றும் ரூ.1,500 பேங்க் தள்ளுபடி போக ரூ.31,499 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, இந்த விவோ வி50 போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இது கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கிறது. மெயின் கேமராவில் ஓம்விஷன் ஓவி50ஈ ( Omnivision OV50E) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உள்ளது.
இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங், ஆட்டோ போகஸ், ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு போன்ற பிரீமியம் சப்போர்ட் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
மேலும், ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் யுஐ கொடுக்கும் பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) கிடைக்கிறது. 90W சார்ஜிங், 6000mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








