வாங்குனா இதுதான்.. ZEISS கேமரா.. QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 3D ஸ்டார் பேனல்.. 50MP செல்பீ.. எந்த மாடல்?
போர்ட்ராய்டு கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிடும்படியான பீச்சர்களுடன் விவோ வி50 (Vivo V50) இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, ஓஎஸ், பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவிட்டது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே முதல் ஜீஸ் போர்ட்ராய்டு கேமரா வரையில் ஆல்-ரவுண்ட் வேரியண்ட்டாக வெளியாக இருக்கிறது. இந்த விவோ வி50 போனின் அதிகாரப்பூர்வ பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவோ வி50 போனானது, பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விவோ நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை. ஆனால், கேமரா, டிஸ்பிளே, ஓஎஸ், பேட்டரி மட்டுமல்லாமல், விவோ வி50 போனில் என்னென்ன ஏஐ பீச்சர்கள் வரப்போகிறது என்பதை விவோ இந்தியா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது.
ஆகவே, தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும் பிப்ரவரி மாதத்தில் விவோ வி50 வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. இந்தியாவின் முதலாவது 3டி ஸ்டார் டெக்னாலஜி கொண்ட மாடலாகவும் இந்த விவோ வி50 இருக்கிறது. அதாவது, பேக் பேனலில் 3டி அனிமேஷன் போல ஸ்டார்களை பார்க்க முடியும். இப்போது, விவோ நிறுவனம் உறுதி செய்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): இந்த விவோ போனில் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட ஜீஸ் கேமரா சிஸ்டம் (ZEISS Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் விவோ நிறுவனத்தின் கேமரா பயோனிக் ஸ்பெக்ட்ரம் (Camera-Bionic Spectrum) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது. அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி குரூப் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவிலும் ஆட்டோபோகஸ், ஜீஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) கிடைக்கிறது. ஆகவே, பொக்கெ எபெக்ட் போட்டோக்களின் அவுட்புட் பிரீமியமாக கிடைக்கிறது. இதில் ஸ்ட்ரீட் போர்ட்ராய்டு (Sreet Portrait), கிளாசிக் போர்ட்ராய்டு (Classic Portrai), லேண்ட்ஸ்கேப் போர்ட்ராய்டு (Landscape Portait) போன்றவை போகல் லென்த் மாற்றப்பட்டு கிடைக்கின்றன.
மேலும், 7 கிளாசிஸ் ஸ்டைலில் ஜீஸ் ஸ்டைல் பொக்கெ (ZEISS Style Bokeh) பீச்சர்கள் இருக்கின்றன. ஜீஸ் சோனார் ஸ்டைல் பொக்கெ (ZEISS Sonnar Style Bokeh), ஜீஸ் சினிமாடிக் ஸ்டைல் பொக்கெ (ZEISS Cinematic Style Bokeh), ஜீஸ் சினி-பிளார் போர்ட்ராய்டு (ZEISS Cine-flare Portrait), ஜீஸ் டிஸ்டாகன் ஸ்டைல் பொக்கெ (ZEISS Distagon Style Bokeh) போன்ற 7 ஸ்டைல் போர்ட்ராய்டு பீச்சர்கள் உள்ளன.
இதுபோக செல்பீ கேமராவில் ஜீஸ் குரூப் செல்பீ (ZEISS Group Selfie) கிடைக்கிறது. மேலும், இந்திய பிரியர்களுக்காக பிரத்யேக வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Wedding Portrait Studio) மற்றும் வெட்டிங் ஃபிரேம் (Wedding Frame) போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. நைட் போர்ட்ராய்டு என்ஹான்ஸ்மெண்ட கொடுக்க ஏஐ ஸ்டூடியோ லைட் போர்ட்ராய்ட் 2.0 சப்போர்ட் உள்ளது.
இதற்காக ஆரா எல்இடி கிடைக்கிறது. IP68 மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு டயமன்ட் சீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) பாதுகாப்பு இருக்கிறது. டைட்டானியம் கிரே (Titanium Gray), ரோஸ் ரெட் (Rose Red), ஸ்டார்ரி நைட் ப்ளூ (Starry Night Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது. 7.3 எம்எம் ஸ்லிம் பாடியில் 6000mAh பேட்டரி வருகிறது.


Click it and Unblock the Notifications








