Home
Mobile

மார்கெட் மிரளுது.. QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. ZEISS கேமரா.. 3D டெக்னாலஜி.. AURA எல்இடி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும்படி 3டி ஸ்டார் டெக்னாலஜி கொண்ட பேக் பேனல் மட்டுமல்லாமல், ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, ஆரா எல்இடி, வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் விவோ வி50 (Vivo V50) களமிறங்க இருக்கிறது. இந்த விவோ போனின் வெளியீட்டு தேதி எப்போது? முழு பீச்சர்கள் எப்படி? எந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் களமிறங்க இருக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ நிறுவனம், இந்த போனின் டிசைன் மற்றும் சில பீச்சர்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், விலை மற்றும் விற்பனை தேதியை உறுதி செய்யவில்லை. இருப்பினும், அந்த விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, முதலில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்த்துவிட்டு, கசிந்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மார்கெட் மிரளுது.. QUAD டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. ZEISS கேமரா போன்!

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): இந்த விவோ போன் காஸ்மிக் லீப் (Cosmic Leap) டிசைனில் 3டி ஸ்டார் டெக்னாலஜி (3D-Star Technology) கொண்டிருக்கிறது. ஆகவே, கலர் சேஞ்சிங் பேக் பேனல் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி கொடுக்கிறது. இருப்பினும், இந்த செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் மாடலாக வெளியாக இருக்கிறது.

இதில் மூன்று கலர் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, டைட்டானியம் கிரே (Titanium Gray), ரோஸ் ரெட் (Rose Red) மற்றும் ஸ்டார்ரி நைட் ப்ளூ (Starry Night Blue) ஆகிய கலர்களில் வர இருக்கிறது. இதில் டைட்டானியம் கிரே மாடலானது வெறும் 7.3 எம்எம் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல ரோஸ் ரெட் மாடலில் 7.5 எம்எம் பாடி வருகிறது.

மேலும், ஸ்டார்ரி நைட் ப்ளூ மாடலில் 7.6 எம்எம் ஸ்லிம் பாடி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் ஸ்லிம் பாடி கொண்டிருந்தும், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கிடைக்கிறது. முந்தைய சீரிஸ்களில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தாலும், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே வரவில்லை. இது விவோ வி50 போனில் கிடைக்க இருக்கிறது.

இதுபோக கலர் சேஞ்சிங் டெக்னாலஜி, ஆரா லைட் பீச்சர், வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு போன்ற இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பீச்சர்களையும் இந்த போனில் எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்திய விவோ பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த விவோ வி50 போனின் டிசைன் மற்றும் பீச்சர்கள் இருக்கும் என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், பிரீமியம் விவோ போன்களில் கிடைக்கும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே விவோ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம். இந்த விவோ வி50 போனானது, பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிறது.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Octa Core Snapdragon 7 Gen 3) சிப்செட் வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த விவோ போனின் விலை ரூ.30000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 With 3D Star Technology 6000mAh Battery Launch Soon India Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X