நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் நாளை (17-02-2025) விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலையை இங்கே பார்க்கலாம்.
விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (ZEISS Camera System) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி50 ஸ்மார்ட்போன். மேலும் இதன் மெயின் கேமராவில் விவோ நிறுவனத்தின் கேமரா பயோனிக் ஸ்பெக்ட்ரம் (Camera-Bionic Spectrum) சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த விவோ போன் கேமராக்கள். பின்பு அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது.
குறிப்பாக செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த செல்பி கேமராவிலும் ஆட்டோபோகஸ், ஜீஸ் சப்போர்ட் கிடைக்கிறது. பின்பு இந்த போனில் 7 கிளாசிஸ் ஸ்டைலில் ஜீஸ் ஸ்டைல் பொக்கெ (ZEISS Style Bokeh) பீச்சர்கள் இருக்கின்றன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் வெளிவரும். ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. மேலும் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது.

6000mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி50 போனில் உள்ளன
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.34,999 விலையில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய விவோ போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications