2025 ஆரம்பமே தீயே இருக்கே.. 4 புதிய VIVO போன்கள்.. ரூ.7,990 முதல் ரூ.39,999 வரை.. என்னென்ன மாடல்கள்?
2025 ஆம் ஆண்டு தொடங்கியதுமே பல்வேறு மொபைல் நிறுவனங்களிடம் இருந்து, பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் தான். ஆனால் ஒரே நிறுவனத்திடம் இருந்து பல எண்ணிக்கையிலான மாடல்கள் அறிமுகமாகும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அது விவோ (Vivo) நிறுவனமாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அதன் மிட்-பிரீமியம் விலைப்பிரிவின் அறிமுகமான விவோ வி40 சீரீஸின் (Vivo V40 Series) அப்கிரேடட் மாடல்கள் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. அதாவது விவோ வி50 சீரீஸ் (Vivo V50 Series) ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமும் என்பது போல் தெரிகிறது.

பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்க்கப்படும் இந்திய தரநிலைகள் பணியக (Bureau of Indian Standards) சான்றிதழ் தளத்தில் விவோ வி50இ (Vivo V50e) மற்றும் விவோ வி50 (Vivo V50) ஆகிய 2 மாடல்களும் காணப்பட்டுள்ளன. பொதுவாக பிஐஎஸ் தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை (Imminent launch) காண்பது வழக்கம்.
ஆக விவோ வி50இ மற்றும் விவோ வி50 ஆகிய இரண்டுமே எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இவ்விரு ஸ்மார்ட்போன்களோடு சேர்த்து, விவோ ஒய்29 4ஜி (Vivo Y29 4G) மற்றும் விவோ ஒய்04 (Vivo Y04) ஆகிய மாடல்களும் கூட சிக்யூசி (CQC) சான்றிதழை பெற்றுள்ளன. சார்ஜிங் ஸ்பீட் (Charging Speed) தொடர்பான இந்த சான்றிதழ் தளமானது, இந்த 2 மாடல்களின் அறிமுகத்தையும் உறுதிப்படுத்துகிறது.
பொதுவாக விவோவின் வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது சீனாவிற்கு மட்டுமே பிரத்தியேகமான விவோ எஸ்-சீரீஸின் (Vivo S Series) ரீபிராண்டட் வெர்ஷன்களாகவே (Rebranded Versions) இருக்கும் (சில சிறிய வன்பொருள் மாற்றங்களுடன்வரும்). அப்படி பார்க்கும் போது விவோ வி50 சீரீஸ் ஆனது கடந்த நவம்பரில் சீனாவில், தோராயமாக ரூ. 27,000 என்கிற தொடக்க விலையில் அறிமுகமான விவோ எஸ்20 சீரீஸின் (Vivo S20 Series) ரீபிராண்டட் மாடல்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது
விவோ ஒய்29 4ஜி மற்றும் விவோ ஒய்04 ஸ்மார்ட்போன்களின் சார்ஜிங் ஸ்பீடை பொறுத்தவரை, விவோ ஒய்29 4ஜி ஆனது விவோ ஒய்28 4ஜி (Vivo Y28 4G) மாடலை போலவே 44W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று சான்றிதழ் காட்டுகிறது. மறுகையில் உள்ள விவோ ஒய்04 மாடல் ஆனது15W பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் விவோ ஒய்03 (Vivo Y03) மாடலிலும் கூட இதே சார்ஜிங் ஸ்பீட் தான் உள்து
விவோ ஒய்29 4ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் (Snapdragon 685 Chipset) மூலம் இயக்கப்படலாம். இந்த சிப்செட் 8ஜிபி ரேம் (8GB RAM) உடன் இணைக்கப்படலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் வரலாம்.
விலைகளை பொறுத்தவரை விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது (Vivo V50 Price in India) இந்திய சந்தையில் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள விவோ வி50இ ஸ்மார்ட்போன் ஆனது (Vivo V50e Price in India) ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விவோ ஒய்29 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது (Vivo Y29 4G Price in India) இந்திய சந்தையில் ரூ.13,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக உள்ள விவோ ஒய்04 ஸ்மார்ட்போன் ஆனது (Vivo Y04 Price in India) ரூ.7,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








