Home
Mobile

மொத்த இந்தியாவும் இந்த Vivo போனுக்கு வெயிட்டிங்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் V2427 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சமீபத்தில் தான் ஆன்லைனில் கசிந்தது. அதன்படி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) கொண்டுள்ளது இந்த போன். மேலும் ரிங் எல்இடி ப்ளாஷ் ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மொத்த இந்தியாவும் இந்த Vivo போனுக்கு வெயிட்டிங்.. எந்த மாடல்?

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும்ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த இந்தியாவும் இந்த Vivo போனுக்கு வெயிட்டிங்.. எந்த மாடல்?

குறிப்பாக 6500mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

டீப் ப்ளூ (Deep Blue),கிரே (Grey) மற்றும் ஷிம்மரி ஒயிட் (Shimmery White) நிறங்களில் விவோ வி50 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் தகவலின்படி பட்ஜெட் விலையில் இந்த அட்டகாசமான விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ போன்.

photo credit: smartprix, gizmochina, ZionsAnvin, 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 Spotted on BIS Certification Site: India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X