அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான கேமரா அம்சம் கொண்ட போன்களை அறிமுகம் செய்கிறது. இதனால் தான் இந்தியாவில் விவோ போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் அடுத்து விவோ வி50 போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது விவோ வி50 (Vivo V50) போன் ஆனது தற்போது NCC சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே கூடிய விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த சான்றிதழ் தளத்தில் விவோ வி50 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் நிறங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி50 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. அதேபோல் டால்பி அட்மாஸ் ஆடியோ அதரவுடன் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
டீப் ப்ளூ (Deep Blue),கிரே (Grey) மற்றும் ஷிம்மரி ஒயிட் (Shimmery White) நிறங்களில் விவோ வி50 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் விவோ வி50 போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: Vivo, jagran.com, 91mobiles


Click it and Unblock the Notifications








