புதிய VIVO போன்.. 50MP+50MP ZEISS கேமரா, 6000mAh பேட்டரி, IP69, ஸ்மார்ட் AI.. எந்த மாடல்? என்ன விலை?
ஸ்டைலான லுக், அதை மெருகேற்றும் படியான 3 கூலான கலர் ஆப்ஷன்கள், நல்ல பில்ட் குவாலிட்டி, கூடவே அட்டகாசமான கேமரா செட்டப் என ஒரு தரமான விவோ ஸ்மார்ட்போன், இந்த மாதம் (அதாவது 2025 பிப்ரவரி மாதம்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனாகும்
இது கடந்த 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகி, விற்பனையில் சக்கைபோடு போட்ட விவோ வி40 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும். அறிமுகத்திற்கு முன்பாக விவோ நிறுவனம் அதன் விவோ வி50 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை குறித்த பல முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது 3 கலர்களில் வரும்: ரோஸ் ரெட் (Rose Red), ஸ்டாரி ப்ளூ (Starry Blue) மற்றும் டைட்டானியம் க்ரே (Titanium Grey). மேலும் இது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது ZEISS உடன் இணைந்து உருவாக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதில் 50MP ZEISS OIS ப்ரைமரி கேமரா மற்றும் 50MP ZEISS அல்ட்ரா-வைட்-ஆங்கிள்-கேமரா இருக்கும். செல்பீ கேமராவை பொறுத்தவரை இது 50MP ZEISS குரூப் செல்ஃபி கேமராவை கொண்டிருக்கும்
விவோவின் கூற்றுப்படி விவோ வி50 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது நேச்சுரல் போர்ட்ரெயிட், ஸ்ட்ரீட் போர்ட்ரெயிட் மற்றும் கிளாசிக் போர்ட்ரெயிட் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் IP68 மற்றும் IP69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளன.
டிஸ்பிளே பாதுகாப்பிற்காக, ஜெர்மனியின் ஸ்பெஷலிட்டி கிளாஸ் உற்பத்தியாளரான ஷாட் உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட டைமண்ட் ஷீல்ட் கிளாஸ் உடன் விவோ வி50 ஸ்மார்ட்போன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல வகையான ஸ்மார்ட் ஏஐ அம்சங்களும் இடம்பெறும். இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான பன்டச்ஓஎஸ்15 (FunctouchOS 15) உடன் வரும்
கூடவே இது மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (இது 6000எம்ஏஎச் பேட்டரி ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது). எதிர்பர்க்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் கொண்டு இயங்கலாம்.
விலையை பொறுத்தவரை, விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.37,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும்இது ஒரு நிச்சயமற்ற விலை நிர்ணயம் ஆகும். இருப்பினும் இதன் விலை எப்படி பார்த்தாலும் ரூ.40,000 க்குக் கீழே இருக்கும் என்று நம்பலாம். விவோ வி50 ப்ரோ மாடலை பொறுத்தவரை இந்தியாவில் ரூ.41,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த பிப்ரவரி 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R): இது ரூ.30,000 செக்மென்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம். சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56). இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.32,990 மற்றும் ரூ.43,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2). சீனாவில் ஒப்போ பைண்ட் என்5 ஆக அறிமுகம் மாடல் உலகின் மற்ற சந்தைகளில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். டெக்னோ கர்வ் (TECNO Curve). இது ரூ.10,000 - ரூ.20,000 செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தலாம்.
ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 சீரீஸ் (ASUS ROG Phone 9 Series): இந்த சீரிஸின் கீழ் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 (ASUS ROG Phone 9) மற்றும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 9 ப்ரோ (Asus ROG Phone 9 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். இவைகள் முறையே ரூ.83,990 க்கும், ரூ1,01,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra). இதன் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருக்கும்! Photo Courtesy: yogesh yadav @yogeshyaa | X


Click it and Unblock the Notifications








