இந்த Vivo போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்! சோனி கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விவோ வி50 லைட் (Vivo V50 Lite) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ. இந்நிலையில் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (Tipster Paras Guglani) இந்த போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி டூயல் ரியர் கேமரா, ஆரா லைட் (Aura light), பன்ச் ஹோல் டிஸ்பிளே(Punch Hole Display) உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி50 லைட் போன். மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி50 லைட் அம்சங்கள் (Vivo V50 Lite specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2392 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX 882) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆரா லைட் யூனிட் (Aura Light unit) வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டு இந்த விவோ போன். இதுதவிர பல்வேற கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

6500mAh பேட்டரி உடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: Tipster Paras Guglani, mysmartprice


Click it and Unblock the Notifications








