செல்லமே சீக்கிரம் வந்திடு.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ வி50 லைட் (Vivo V50 Lite) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த புதிய விவோ போன் வெளியாகும்.
அதேபோல் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது Google Play Console தளத்தில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி50 லைட் அம்சங்கள் (Vivo V50 Lite specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Qualcomm's Snapdragon 680 chipset) வசதியுடன் இந்த புதிய விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிற் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2392 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.
6500mAh பேட்டரி உடன் விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ராவைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ வி50 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆரா லைட் யூனிட் (Aura Light unit) வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிரபல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவோ வி50 லைட் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: xpertpick
source: xpertpick, google play console


Click it and Unblock the Notifications