Home
Mobile

மீண்டும் மீண்டுமா? 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சமீபத்தில் விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ விவோ வி50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்தது. இந்நிலையில் விவோ வி50 லைட் 5ஜி (Vivo V50 Lite 5G) எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது விவோ நிறுவனம்.

அதாவது மலேசியாவின் SIRIM தளத்தில் இந்த விவோ வி50 லைட் 5ஜி போன் காணப்பட்டது. எனவே அங்கு விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் விவோ வி50 லைட் 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ வி50 லைட் 5ஜி போனின் சில அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மீண்டும் மீண்டுமா? வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி50 லைட் 5ஜி அம்சங்கள் ( Vivo V50 Lite 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி50 லைட் 5ஜி போன் வெளிவரும்.

அதேபோல் 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 6500எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் சில அம்சங்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த விவோ வி50 லைட் 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி50 போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm's Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது.

இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1,080 x 2,392 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (ZEISS Camera System) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி50 ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன்.

IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த போனில் வருகிறது. மேலும் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது.

மீண்டும் மீண்டுமா? வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 6000mAh பேட்டரி உடன் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி,வைஃபை,ஜிபிஎஸ், புளூடூத் 5.4, ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி50 போனில் உள்ளன.

இந்த விவோ போனின் டைட்டானியம் கிரே வெர்ஷன் (Titanium Grey version) 189 கிராம் எடை கொண்டது. அதே நேரத்தில், ரோஸ் ரெட் (Rose Red) மற்றும் ஸ்டாரி நைட் (Starry Night) வெர்ஷன்கள் 199கிராம் எடையுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விவோ வி50 போனின் ஆரம்ப விலை ரூ.34,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 Lite 5G Lite 5G specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X