Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ வி50 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது விவோ வி50 லைட் 5ஜி (Vivo V50 Lite 5G) ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக சோனி கேமரா, ஒஎல்இடி டிஸ்பிளே, 6500mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி50 லைட் 5ஜி அம்சங்கள் ( Vivo V50 Lite 5G specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்பி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ லைட் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பவிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1800 நிட்ஸ் பீக் HBM ப்ரைட்னஸ், எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் (SGS low blue light certification) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 6500mAh பேட்டரி, சோனி கேமரா.. எந்த மாடல்

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ வி50 லைட் 5ஜி மாடல். இதுதவிர ஆரா லைட் (Aura light) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Take a Poll

8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek's Dimensity 6300) சிப்செட் உடன் விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

6500mAh பேட்டரி உடன் விவோ வி50 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதுவும் 53 நிமிடங்களுக்குள் இந்த பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 6500mAh பேட்டரி, சோனி கேமரா.. எந்த மாடல்

மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ லைட் 5ஜி வெளிவந்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) மற்றும் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

ஆனால் விவோ வி50 லைட் 5ஜி போன் தற்போது ஸ்பெயினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ லைட் 5ஜி மாடலின் விலை €399 (ரூ.37,346) ஆக உள்ளது. விரைவில் இந்த புதிய விவோ 5ஜி போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 Lite 5G launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X