Vivo V50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ வி50 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1,080 x 2,392 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (ZEISS Camera System) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி50 ஸ்மார்ட்போன். அதேபோல் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த விவோ போன் கேமராக்கள். பின்பு அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. ஆரா லைட் அம்சமும் இந்த போனில் உள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த செல்பி கேமராவிலும் ஆட்டோபோகஸ், ஜீஸ் சப்போர்ட் கிடைக்கிறது. பின்பு சர்க்கிள் டு சர்ச், டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், லைட் போர்ட்ரெய்ட் 2.0, ஏஐ எடிட்டிங், லைவ் கால் டிரான்ஸ்லேஷன் போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm's Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த போனில் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. மேலும் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது.
6000mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி,வைஃபை,ஜிபிஎஸ், புளூடூத் 5.4, ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி50 போனில் உள்ளன.

குறிப்பாக இந்த போனின் டைட்டானியம் கிரே வெர்ஷன் (Titanium Grey version) 189 கிராம் எடை கொண்டது. அதே நேரத்தில், ரோஸ் ரெட் (Rose Red) மற்றும் ஸ்டாரி நைட் (Starry Night) வெர்ஷன்கள் 199கிராம் எடையுடன் வெளிவந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.36,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.40,999 விலையிலும் வாங்கிவிட முடியும். பிப்ரவரி 25 முதல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோர் தளங்களில் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








