பிப்.18-க்கு இருக்கு.. Vivo பிரியர்களுக்கு குஷி.. விவோ வி50 விலை எப்படி? பீச்சர்கள் என்னென்ன?
இந்தியாவில் இருக்கும் விவோ பிரியர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட விவோ வி50 (Vivo V50) போனானது, பிப்ரவரி 18ஆம் தேதியில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது, அதிகாரப்பூர்வ போஸ்டர் லீக்காகி அதை உறுதி செய்திருக்கிறது. அதோடு விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த விவோ வி50 போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவோ வி50 பிப்ரவரி மாதத்தில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதிதான். ஏனென்றால், அதற்கான சர்டிபிகேஷனுக்கு இந்த போன் ஏற்கனவே வந்துவிட்டது. இருப்பினும், விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதை அறிவிக்கவில்லை. ஆனால், மார்கெட்டில் பீச்சர்கள், விலை மற்றும் டிசைன் விவரங்கள் அடுத்தடுத்து கசிந்து வருகின்றன. இப்போது, போஸ்டர் லீக்காகி இருக்கிறது.

இந்த விவோ வி50 போன் வெளியாக இருப்பதை அந்த போஸ்டர் காட்டுகிறது. ஆகவே, பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனிடையே விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, இந்த வி50 போன் ரூ.37,999 ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரூ.40000 பட்ஜெட்டில் வெளியாவது தெரிகிறது.
இது ஏற்கனவே இந்தியாவில் வெளியான விவோ வி40 போனின் விலையைவிட் ரூ.3000 அதிகமாக இருக்கிறது. அந்த போன் ரூ.34,999 பட்ஜெட்டில் வெளியானது, இந்த போன் கூடுதல் விலைக்கு வர இருக்கிறது. இதற்கு ஏற்ப டிசைனிலும், பீச்சர்களிலும் அப்கிரேட் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): இந்த பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த விவோ வி50 போனில் ஜீஸ் (ZEISS) கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆரா எல்இடி லைட்டுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
மெயின் கேமராவில் சோனி சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கேமரா வர வாய்ப்புள்ளது. அதோடு ஏஐ பீச்சர்களும் இடம்பெறலாம். 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இந்த அமோலெட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.
மிட்-பிரீமியம் மாடலாக இருப்பதால், ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. கிராபிக்ஸ் கார்டு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்த விவோ வி50 போனில் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் கிடைக்க இருக்கிறது. IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.
ஆகவே, அண்டர் வாட்டர் கேமரா சப்போர்ட் கிடைக்கும். மேலும், வழக்கமான இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்கள் இடம்பெறுகிறது. ரோஸ் ரெட் (Rose Red) கலர் வேரியண்ட்டின் லுக் ஏற்கனவே கசிந்துள்ளது. மேலும், 2 கலர்களில் கிடைக்கலாம். அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications