பிப்.18 வரை பொறுங்க.. பக்காவான பட்ஜெட்டில் புது Vivo போன்.. 12GB ரேம், 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
2025 ஜனவரி மாதத்தை போல் இல்லாமல் (ஒன்பிளஸ் 13 சீரீஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் போன்ற விலை அதிகமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதை போல் இல்லாமல்) 2025 பிப்ரவரி மாதத்தில் பலவகையான விலைப்பிரிவுகளின் கீழ், பல நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் (இந்தியா மற்றும் உலகளவில்) அறிமுகம் செய்யப்பட உள்ளன!
ஒருவேளை உங்களுடைய முழு கவனம் விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே இருந்தால். பிப்ரவரி 18 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளவும். ஏனென்றால் அன்றுதான் விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது பிப்.18 வரவில்லை என்றாலும் கூட, எப்படியும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்பதால், விவோ வி50 மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டாம்.

(புகைப்படத்தில் உள்ளது விவோ வி40 ப்ரோ மாடலாகும்). ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சீன பிராண்ட் ஆன விவோ அதன் விவோ வி50 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 2025 மூன்றாவது வாரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விவோ வி50 சீரீஸ்ல் ப்ரோ மாடல் இருந்தாலும் கூட பேஸிக் வேரியண்ட் தான் முதலில் அறிமுகமாகும்; ப்ரோ வேரியண்ட்டின் அறிமுகம் பின்னர் நடக்கும் என்று கூறப்படுகிறது.
விவோ வி40 (Vivo V40) மற்றும் விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் கூட கடந்த ஆண்டு இதே நேரத்தில் தான் (ஒன்றாக) அறிமுகமானது. இருப்பினும் இந்தாண்டு விவோ வி50 ப்ரோ மாடல் ஆனது சற்றே தாமதமாக அறிமுகம் செய்யப்படும். விவோ வி50 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் என்சிசி (NCC) சான்றிதழ் வெளிப்படுத்தப்பட்டுள்ளன
அதன்படி விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் என்கிற 2 மெமரி ஆப்ஷன்களில் வரும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000mAh பேட்டரி பேக் செய்யும் என்றும், இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை விவோ வி50 ஸ்மார்ட்போனின் ரியர் கேமராக்கள் ஆனது ஸெய்ஸ் (Zeiss) பிராண்டிங் உடன் வரும். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு வரும் விவோ வி50 ஸ்மார்ட்போன் ஆனது, சீனாவிற்கு பிரத்யேகமான விவோ வி20 ஸ்மார்ட்போனின் நேரடி ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்காது; மாறாக சற்றே மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் ஆக இருக்கும் என்பது போல் தெரிகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரூ.35,000 - ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் .
பிப்ரவரி 2025 வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவைகள் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) அல்லது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஆகிய மாடல்கள் முறையே உலகளாவிய மற்றும் இந்தியா வெளியீட்டை காண உள்ளன. இரண்டுமே பிப்ரவரி 2025 இல் அறிமுகமாகும். ஒன்பிளஸ் ஓப்பன் 2-வின் விலை ரூ.1,80,000 வரை செல்லலாம்.
ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ஸ்மார்ட்போனும் கூட இந்திய அறிமுகத்திற்காக டீஸ் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படலாம். முந்தைய ஐக்யூ நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை கருத்தில் கொண்டால் இது ரூ.40,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆசஸ் சென்போன் 12 அல்ட்ரா (Asus Zenfone 12 Ultra) ஆனது உலகளாவிய அறிமுகத்தை காண்கிறது. இது பிப்ரவரி 6 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த லீக்ஸ் தகவலும் இல்லை. கடைசியாக ஷாவ்மீ 15 சீரிஸ் (Xiaomi 15 Series) ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2025 இல் இந்திய அறிமுகத்தை சந்திக்க உள்ளன. இந்த சீரீஸின் ஷாவ்மீ 15 மாடல் ஆனது ரூ.74,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








