இதுதான் புது விவோ 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சான்றிதழ் தளத்தில் V2427 என்ற மாடல் நம்பர் உடன் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் புகைப்படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த விவோ வி50 போன் ஆனது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ரிங் எல்இடி ப்ளாஷ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் வெளிவரும். இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.
குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
டீப் ப்ளூ (Deep Blue),கிரே (Grey) மற்றும் ஷிம்மரி ஒயிட் (Shimmery White) நிறங்களில் விவோ வி50 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் தகவலின்படி பட்ஜெட் விலையில் இந்த அட்டகாசமான விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: jagran, gizmochina, ZionsAnvin, 91mobiles


Click it and Unblock the Notifications








