Home
Mobile

VIVO-வின் புது Elite Edition.. FREE இயர்பட்ஸ் உடன் ஆபர் விலையில் விற்பனை.. ZEISS கேமரா, 6000mAh பேட்டரி!

விவோ (Vivo) நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆக விவோ வி50 எலைட் எடிஷனை (Vivo V50 Elite Edition) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ வி50 சீரீஸ்-ன் (Vivo V50 Series) மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் எனக் கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் - 6000எம்ஏஎச் பெரிய பேட்டரி, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மற்றும் ZEISS உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப்பை வழங்குகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் (Diamond Shield Glass) மற்றும் ஐபி 68 / ஐபி 69 ரேட்டிங்களுடன் (IP68 / IP69 Ratings) வருகிறது. இது டிராப் ரெசிஸ்டண்ட் (Drop Resistant) மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (Water Resistant) ஆகியவைகளுக்கான ரேட்டிங் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்னென்ன சேல் ஆபர்? இதோ விவரங்கள்:

VIVO-வின் புது Elite Edition.. FREE இயர்பட்ஸ் உடன் ஆபர் விலையில்!

விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Vivo V50 Elite Edition Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ வி50 எலைட் எடிஷன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டால் (Snapdragon 7 Gen 3 chipset) இயக்கப்படுகிறது. கூடவே இது 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 கொண்டு இயங்குகிறது மற்றும் பல வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்கிற வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ அடிப்படையிலான டூல்களுடன் (AI Powered Tools) வருகிறது. இதில் ஏஐ ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு (AI Screen Translation), லைவ் கால் மொழிபெயர்ப்பு (Live Call Translation), மேம்படுத்தப்பட்ட சிக்னல் தரத்திற்கான ஏஐ சூப்பர்லிங்க் (AI SuperLink for improved signal quality) மற்றும் புகைப்பட மேம்பாட்டிற்கான ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0) ஆகியவை அடங்கும்.

கேமராவை பொறுத்தவரை, விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது OIS, அல்ட்ரா-வைட் மற்றும் குரூப் செல்ஃபியுடன் கூடிய 50எம்பி ZEISS ஆல்-மெயின் கேமராவுடன் வருகிறது. இது ZEISS மல்டிஃபோகல் போர்ட்ரெய்ட்ஸ் (23mm, 35mm, 50mm), ஏழு ZEISS போர்ட்ரெய்ட் ஸ்டைல்கள் மற்றும் இந்தியாவிற்கான பிரத்தியேக வெட்டிங் ஸ்டைல் போர்ட்ரெய்ட் ஸ்டுடியோ ஆகியவற்றை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 90W பாஸ்ட் சார்ஜிங்குடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள் (Vivo V50 Elite Edition Price, Sale Date and Offers): விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் வருகிற மே 15 முதல் பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை சேனல் பார்ட்னர்களின் வழியாக வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் கேபிள், அடாப்டர், ப்ரொடெக்டிவ் கேஸ் மற்றும் விவோ TWS 3e டார்க் இண்டிகோ ஆகியவற்றையும் பெறுவார்கள்.

விலையை பொறுத்தவரை விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC, SBI மற்றும் Axis வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழும் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 Elite Edition Launched in India Price Specifications Features Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X