மே 15 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. வருகிறது புது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து விவோ வி50 எலைட் எடிஷன் (Vivo V50 Elite Edition) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வரும் மே 15-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான விவோ வி50 ஸ்மார்ட்போனை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த விவோ வி50 எலைட் எடிஷன ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் விவோ வி50 எலைட் எடிஷன ஸ்மார்ட்போன் ஆன பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி50 எலைட் எடிஷன் அம்சங்கள் (Vivo V50 Elite Edition Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080×2,392 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் உடன் விவோ வி50 எலைட் எடிஷன ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர ஆரா லைட் மற்றும் பல்வேறு AI அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
12ஜிபி வரை மெமரி மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பலவேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








