அடடே விலையில்.. புது VIVO போன்.. 90W சார்ஜிங், 6000mAh பேட்டரி, Zeiss கேமரா, IP69, 12GB ரேம்.. என்ன மாடல்?
விவோ நிறுவனம், மே 15 ஆம் தேதியன்று ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அது விவோ வி50 எலைட் எடிஷன் (Vivo V50 Elite Edition) ஸ்மார்ட்போனாகும். வெளியீட்டு தேதி உடன் சேர்த்து விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா டிசைனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
இது கடந்த 2025 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி50 ஸ்மார்ட்போனில் காணப்படும் டேப்லெட் வடிவ ரியர் கேமரா ஐலேண்ட்-ஐ கொண்டிருக்கவில்லை. மாறாக இது சர்குலர் ஷேப்டு ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது/ இருப்பினும் இது ஸ்அண்டர்ட் வெர்ஷனில் உள்ள பெரும்பாலான அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது மே 15 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று விவோ நிறுவனம் ஒரு எக்ஸ் பதிவின் வழியாக உறுதிப்படுத்தி உள்ளது. அதனுடன் வரும் வீடியோவில், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் "எலைட் எடிஷன்" என்கிற டெக்ஸ்ட் பொறிக்கப்பட்டுள்ளது!
விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஸ்னாப் டிராகன் 7 ஜென் 3 சிப்செட்
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000mAh பேட்டரி
- ஸெய்ஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- ஐபி68 மற்றும் ஐபி69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.77-இன்ச் FHD+ குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான FuntouchOS 15
- 12GB வரை LPDDR4X ரேம்
- 512GB வரை UFS 2.2 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
விவோ வி50 எலைட் எடிஷன் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? நினைவூட்டும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, விவோ வி50 (ஸ்டாண்டர்ட் எடிஷன்) மாடலின் பேஸிக் 8GB + 128GB, 8GB + 256GB, மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999, ரூ.36,999 மற்றும் ரூ.40,999 க்கு வாங்க கிடைத்தது. இந்த போன் ரோஸ் ரெட், ஸ்டாரி ப்ளூ மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது. கிட்டத்தட்ட இதேபோன்ற விலையை நாம் எலைட் எடிஷனிலும் எதிர்பார்க்கலாம்.
மே 23 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் விற்பனை: சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்டர் ஏற்கனவே உலகளவில் தொடங்கி விட்டது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற மே 23 ஆம் தேதி முதல் உலகளாவிய ஸ்டோர்களில் $1,099.99 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 94,000) என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.
டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஐசி ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் 3 ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. ஆனால் இந்த போன் இந்தியாவில் அமேசான் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்; அதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.
மே 26 ஆம் தேதி ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம்: ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) மாடலுக்கு பிறகு ஐக்யூ நியோ 10 சீரிஸின் கீழ் இந்திய சந்தையில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டவுடன்.. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் டிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை வரம்பு ரூ.35,000 க்கும் குறைவாக இருக்கும் என்றும் டீஸ் செய்யப்பட்டு உள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ நியோ 9 9 ப்ரோ ரூ.35,999 க்கு அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








