Home
Mobile

Vivo வி50 ஸ்மார்ட்போனின் First Look.. ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா.. இந்தியாவே வெயிட்டிங்..

விவோ நிறுவனம் அடுத்த மாதம் விவோ வி50 (Vivo V50) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய விவோ போனின் First Look புகைப்படம் வெளியாகி உள்ளது. குறிப்பாக ரோஸ் ரெட் நிறத்தில் இந்த புதிய விவோ வி50 போன் வெளியாகும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

ரிங் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி50 போன். மேலும் இந்த போனில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்தில் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த அசத்தலான போன் வெளிவரும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த விவோ வி50 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

Vivo வி50 ஸ்மார்ட்போனின் First Look..

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் இந்த விவோ வி50 போன் வெளிவரும். ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ வி50 ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

Vivo வி50 ஸ்மார்ட்போனின் First Look..

அதேபோல் 6500mAh பேட்டரி உடன் இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி50 போனில் உள்ளன.

டீப் ப்ளூ (Deep Blue),கிரே (Grey) மற்றும் ஷிம்மரி ஒயிட் (Shimmery White) நிறங்களில் விவோ வி50 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் தகவலின்படி பட்ஜெட் விலையில் இந்த விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான கேமரா மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V50 design revealed : check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X