நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் நாளை (செப்டம்பர் 25) விவோ வி40இ (vivo V40e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைன் வெளியான விவோ வி40இ போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ வி40இ அம்சங்கள் (vivo V40e Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.

அதேபோல் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் (3D curved) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 2392 x 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate), 93.3 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு (HDR10+ Support) உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த புதிய விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆரா லைட் யூனிட் (Aura Light unit) வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40இ போன். பின்பு ஏஐ போர்ட்ரெய்ட் சூட், ஏஐ எரேசர், அல்ட்ரா-ஸ்டேபிள் 4கே வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65-ரேட்டிங் (IP65 rating) கொண்டு அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
விவோ வி40இ போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய விவோ போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ வி40இ போன்.


Click it and Unblock the Notifications








