Home
Mobile

இப்படி ஒரு போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. 256GB மெமரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்த மாதம் இறுதியில் விவோ வி40இ (Vivo V40e) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சோனி கேமரா, அமோலெட் (AMOLED)டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி40இ அம்சங்கள் (Vivo V40e Specifications): 6.78-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40இ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இப்படி ஒரு போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. எந்த மாடல்?

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் சென்சார் (Sony IMX882 main sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி40இ போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அதன்படி தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் தரமான கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.

குறிப்பாக ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இப்படி ஒரு போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. எந்த மாடல்?

5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மேலும் இந்தியாவில் விவோ வி40இ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo V40e will be launched in India by the end of September: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X