Home
Mobile

எகிறுது ஆர்டர்.. ரூ.4000 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

இந்திய மார்கெட்டில் விவோ வி50 (Vivo V50) வெளியாகியதால், முந்தைய மாடல்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட விவோ வி40இ (Vivo V40e) போனானது ரூ.4000 விலை குறைப்பில் கிடைக்கிறது. இதில் பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது. இந்த விவோ வி40இ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஏஐ சூப்பர்லிங்க், ஏஐ எரைசர், ஏஐ போட்டோ என்ஹான்சர் போன் ஏஐ பீச்சர்களை கொண்ட மாடலாக இந்த விவோ வி40இ மாடல் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,999 ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.26,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

எகிறுது ஆர்டர்.. ரூ.4000 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா போன்!

ஆகவே, ரூ.4000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இந்த டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு போக ரூ.11,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். பீச்சர்களை பார்ப்போம்.

விவோ வி40இ அம்சங்கள் (Vivo V40e Specifications): ஏஐ கேமரா பீச்சர்கள் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதுபோக ஐ ஆட்டோ போகஸ் (Eye Auto Focus) சப்போர்ட் கொடுக்கும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் சப்போர்ட் உள்ளது.

ஏஐ பீச்சர்களை கொடுக்கும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமைன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி மாடலுக்கு அடுத்து 256 ஜிபி மெமரி கொண்ட மாடலும் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இந்த விவோ வி40இ போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த அமோலெட் டிஸ்பிளேவில் பிரீமியம் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பதால் அதிக பேட்டரி கேபாசிட்டி கிடைக்காது என்று இதில் நினைக்க வேண்டாம். ஏனென்றால், பெரிய 5500mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரி சிஸ்டம் கொண்டிருந்தும், 7.49 மிமீ தடிமன் மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, ஸ்லிம் பாடி பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-display Fingerprint) சென்சார் கிடைக்கிறது. ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. போர்ட்ராய்டு கேமரா மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40e Sale Under Rs 25000 in Flipkart With Launch Of Vivo V50 Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X