Home
Mobile

இந்தியாவில் அறிமுகமானது புதிய Vivo வி40இ போன்.. சோனி கேமரா.. 5500mAh பேட்டரி.. என்ன விலை?

விவோ நிறுவனம் இந்தியாவில் இன்று இந்தியாவில் விவோ வி40இ (vivo V40e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி40இ அம்சங்கள் (vivo V40e Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு (HDR10+ Support) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது புதிய Vivo வி40இ போன்.. என்ன விலை?

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm)சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார்(Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி40இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். இதுதவிர ஆரா லைட் யூனிட் (Aura Light unit) கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. அதேபோல் விவோ வி40இ போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி40இ போன் விற்பனைக்கு வரும். மேலும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்தியாவில் அறிமுகமானது புதிய Vivo வி40இ போன்.. என்ன விலை?

5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) மற்றும் மிண்ட் கிரீன் (Mint Green) நிறங்களில் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போனில் உள்ளது.மேலும் இந்த போனில் பல ஏஐ அம்சங்கள் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி40இ போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.30,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 2-ம் தேதி பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிளிப்கார்ட் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் (vivo India online store) இந்த போனை வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V40e launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X