அதுக்குள்ளயா? கொஞ்சம் கேப் விடுங்க Vivo.. 3D டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. அடுத்த 5ஜி போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் தான் விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) போனை அறிமுகம் செய்தது விவோ நிறுவனம். இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். அதாவது விவோ நிறுவனம் அடுத்து விவோ வி40இ (Vivo V40e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது BIS சான்றிதழ் தளத்தில் இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி40இ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி40இ அம்சங்கள் (Vivo V40e Specifications): அல்ட்ரா-ஸ்லிம் 3D கர்வ்டு (ultra-slim 3D curved) டிஸ்பிளே உடன் இந்த விவோ வி40இ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
மீடியடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC சிப்செட் உடன் விவோ வி40இ போன் அறிமுகம் செய்யப்படும். இந்த டைமன்சிட்டி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் FunTouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய விவோ போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ போன் வெளிவரும். 80W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் ரியர் கேமராக்கள், 5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக விவோ வி40இ போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இப்போது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ டி3 அல்ட்ரா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். 2800 × 1260 பிக்சல்கள்,120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வரும் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன். தரமான ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4 என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் உடன் இந்த விவோ டி3 அல்ட்ரா போன் வெளிவந்துள்ளது. மேலும் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.
ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 Sensor) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். இந்த ரியர் கேமராக்கள் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவைக் கொண்டுள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus)கொண்டுள்ளது இந்த போன். மேலும் விவோ டி3 அல்ட்ரா போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ , இன்-டிஸ்பிளேஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
லூனார் கிரே (Lunar Gray), ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்கலாம். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.31,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ.காம் (vivo.com) தளங்களில் இந்த போனை வாங்கலாம்.
photo credit: mysmartprice


Click it and Unblock the Notifications