Home
Mobile

செப்டம்பர் 25 உறுதி.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி40இ (vivo V40e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 25-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 செப்டம்பர் 25 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்..

விவோ வி40இ அம்சங்கள் (vivo V40e Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் (3D curved) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் வெளிவரும் மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate), 93.3 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு (HDR10+ Support) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி40இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த புதிய விவோ போன்.

குறிப்பாக ஆரா லைட் யூனிட் (Aura Light unit) வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40இ போன். மேலும் ஏஐ போர்ட்ரெய்ட் சூட், ஏஐ எரேசர், அல்ட்ரா-ஸ்டேபிள் 4கே வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.

 செப்டம்பர் 25 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்..

5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65-ரேட்டிங்கையும் (IP65 rating) கொண்டிருக்கலாம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ வி40இ போனில் உள்ளன. மேலும் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த போனில் உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
vivo V40e India Launch Date Announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X