இப்போ வாங்கடா.. இந்திய மார்க்கெட்டை குறிவச்ச Vivo V40e.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
Vivo V40e India Launch: விவோ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான வி- சீரிஸின் கீழ் விவோ வி40இ என்கிற புதிய ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விவோ நிறுவனம் இன்னும் சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும் கூட, இது எப்படியும் இம்மாத இறுதிக்குள் அறிமுகமாய் விடும். ஏனென்றால் விவோ நிறுவனம் வி40இ ஸ்மார்ட்போனின் டிசைன், கலர் ஆப்ஷன்கள் மற்றும் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. போதாக்குறைக்கு விவோ வி40இ ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் சாத்தியமான விலை வரம்பு குறித்த தகவல்களும் லீக் ஆகியுள்ளது.
புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் ஆனது விவோ வி30இ (Vivo V30e) மாடலின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் மற்றும கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி40 (Vivo V40) மற்றும் விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro) ஸ்மார்ட்போன்களுடன் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி40இ ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் (Official Microsite) ஆனது, இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும், இது மின்ட் க்ரீன் (Mint Green) மற்றும் ராயல் ப்ரான்ஸ் (Royal Bronze) என்கிற இரண்டு கலர்களில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. டிசைனை பொறுத்தவரை இது விவோ வி40 ப்ரோ மற்றும் விவோ வி40 மாடல்களை போலவே, செங்குத்தான பில்-ஷேப்டு ரியர் கேமரா யூனிட் (Vertical pill-shaped rear camera unit) மற்றும் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, விவோ வி4இ ஸ்மார்ட்போன் ஆனது 2392 x 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate), 93.3 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு (HDR10+ Support), எஸ்டிஎஸ் லோ ப்ளூ லைட் சான்றிதழ் (SGS low blue light certification) உடனான 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்டு டிஸ்பிளேவை (3D Curved Display) கொண்டிருக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அமோஎல்இடி டிஸ்பிளேவானது 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (4500 nits peak brightness) மற்றும் 1,200 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் மோட்-ஐ (High Brightness Mode) வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை, இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை விவோ வி40இ ஸ்மார்ட்போன் ஆனது ஆரா லைட் யூனிட் (Aura Light unit) உடனான டூயல் ரியர் கெமர் செட்டப்பை கொண்டிருக்கும். இது அல்ட்ராவைட் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்டிருக்கும். முன்பக்கத்தில 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும்.
சிப்செட்டை பொறுத்தவரை விவோ வி40இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) உடன் அனுப்படலாம். மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65-ரேட்டிங்கையும் (IP65 rating) கொண்டிருக்கலாம்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்தியாவில் விவோ வி40இ ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications