ஆர்டர் தூள் பறக்க போகுது.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Flipkart Big Shopping Utsav 2024 Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ வி40இ 5ஜி (vivo V40e 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விவோ வி40இ 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை ரூ.2900 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.26099 விலையில் இந்த விவோ போனை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி40இ 5ஜி அம்சங்கள் (vivo V40e 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி40இ 5ஜிஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி40இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh rate), 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு (HDR10+ Support) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ வி40இ5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார்(Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். இதுதவிர ஆரா லைட் யூனிட் (Aura Light unit) கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ வி40இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அதேபோல் 5500mAh பேட்டரி உடன் விவோ வி40இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) மற்றும் மிண்ட் கிரீன் (Mint Green) நிறங்களில் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ வி40இ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த போனில் ஏஐ அம்சங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








