Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.31,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. ZEISS கேமரா.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

அல்ட்ரா ஸ்லிம் லுக் மட்டமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சாம்சங் ஐசோசெல் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, ஆட்டோபோகஸ் கொண்ட செல்பீ கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான விவோ வி40 5ஜி (Vivo V40 5G) போனானது, இப்போது டிஸ்கவுண்ட் உடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விவோ வி40 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

விவோ வி40 அம்சங்கள் (Vivo V40 Specifications): இந்த விவோவில் ஐசோசெல் ஜிஎன்ஜே (ISOCELL GNJ) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஆட்டோபோகஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. ஜெய்ஸ் போர்ட்ராய்டு போட்டோகிராபி (ZEISS Portrait Photography) சப்போர்ட் வருகிறது.

மிரட்டிவிட்டாப்ல.. ரூ.31,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. ZEISS கேமரா மாடல்!

ஆகவே, சினிமாடிக் அவுட்புட் கொடுக்கும் போட்டோக்களை எடுக்கலாம். ஜெய்ஸ் பொக்கெ எஃபெக்ட்ஸ் (ZEISS Bokeh Effects), ஜெய்ஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) மற்றும் ஜெய்ஸ் சினிமாடிக் போர்ட்ராய்டு வீடியோ (ZEISS Cinematic Portrait Video) பீச்சர்கள் வருகின்றன. நைட்போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) வருகிறது.

50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரிலும், மெயின் கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த கேமராவில் ஃபெஸ்டிவல் போர்ட்ராய்டு (Festival Portrait), ஏஐ ஆரா லைட் போர்ட்ராய்டு (AI Aura Light Portrait) பீச்சர்கள் வருகின்றன. மேலும், ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) வருகின்றன.

இந்த விவோ வி40 போனில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.

அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருந்தும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த விவோ வி40 போனில் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple), கேங்ஸ் ப்ளூ (Ganges Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.41,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை தொடங்கி இருக்கிறது. எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,499 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம். கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன.

6 மாதங்களுக்குள் விபத்து மற்றும் லிக்விட் டேமேஜ் சர்வீஸ் செய்யும்போது, 10 சதவீத கேஸ்பேக் கொடுக்கப்படும். 12 மாதங்களுக்கான ஜீரோ டவுன் பேமெண்ட் கிடைக்கிறது. இதுபோக 10 சதவீத எக்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இப்படி ஏகப்பட்ட கூடுதல் சலுகைகளுடன் இந்த விவோ வி40 போன் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 With 50MP Camera 8GB RAM Sale From Flipkart Under Rs 33000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X