Home
Mobile

ஆகஸ்ட் உறுதி.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி40 (Vivo V40) மற்றும் விவோ 40 ப்ரோ ((Vivo V40 Pro) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ வி40 போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது விவோ வி40 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி40 அம்சங்கள் (Vivo V40 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400X1080 பிக்சல்ஸஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆகஸ்ட் உறுதி.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்..

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த விவோ வி40 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ(Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

Zeiss கேமரா சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டு வெளிவரும் விவோ வி40. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

விவோ வி40 ப்ரோ அம்சங்கள் (Vivo V40 Pro specifications): 6.78-இன்ச் அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனும் 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200+ SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 12ஜிபி ரேம், 512ஜிபி மெமரி அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆகஸ்ட் உறுதி.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்..

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி40 ப்ரோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.

விவோ வி40 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.50,000 விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 will be launched in India in August: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X