Home
Mobile

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்! Zeiss கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி40 (Vivo V40) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது BIS சான்றிதழ் இணையதளத்தில் இந்த புதிய போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த விவோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டூயல் ரியர் கேமா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

விவோ வி40 ஸ்மார்ட்போன் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. BIS சான்றிதழ் இணையதளத்தில் V2348 என்ற மாடல் நம்பர் உடன் விவோ வி40 போன் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்!  வருகிறது விவோ 5ஜி போன்..

விவோ வி40 அம்சங்கள்(Vivo V40 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400X1080 பிக்சல்ஸஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரிஎன இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் விவோ வி40 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அட்ரினோ (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ வி40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்!  வருகிறது விவோ 5ஜி போன்..

Zeiss கேமரா சென்சார் கொண்டுள்ளது இந்த போன். அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விவோ வி40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 Spotted on BIS Certification Site: India Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X