Home
Mobile

காத்திருப்பு ஓவர்.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. அறிமுகமானது Vivo வி40 சீரிஸ்.. என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி40 சீரிஸ் (Vivo V40 series) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது விவோ வி40 (Vivo V40) மற்றும் விவோ வி40 லைட் (Vivo V40 Lite) போன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி40 அம்சங்கள் (Vivo V40 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 போன். மேலும் 2400X1080 பிக்சல்ஸஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி இதில் உள்ளது.

காத்திருப்பு ஓவர்.. அறிமுகமானது Vivo வி40 சீரிஸ்.. என்ன விலை?

மேலும் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 ( Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக அட்ரினோ (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

Zeiss கேமரா சென்சார் வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த போன். அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ வி40. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

விவோ வி40 லைட் அம்சங்கள் (Vivo V40 Lite specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த விவோ வி40 லைட். மேலும் 2400X1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இதில் ஃபன்டச் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இதில் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராபன் 6 ஜென் 1 ( Snapdragon 6 Gen 1 ) சிப்செட் உடன் விவோ வி40 லைட் போன் வெளிவந்துள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் இதில் உள்ளது.

காத்திருப்பு ஓவர்.. அறிமுகமானது Vivo வி40 சீரிஸ்.. என்ன விலை?

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 32எம்பி செல்பி கேமரா, 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ வி40 போனின் விலை €599 (இந்திய மதிப்பில் ரூ.53,600)-ஆக உள்ளது. பின்பு விவோ வி40 லைட் ஸ்மார்ட்போனின் விலை €399 (இந்திய மதிப்பில் ரூ.35,700)-ஆக உள்ளது. விரைவில் இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 series with Snapdragon 7 Gen 3 launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X