Home
Mobile

ஆகஸ்ட் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. Zeiss கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி40 சீரிஸ் (Vivo V40 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ வி40 (Vivo V40) மற்றும் விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro) ஸ்மார்ட்போன்கள் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகாகும். குறிப்பாக இந்த விவோ போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது இந்த போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி40 அம்சங்கள் (Vivo V40 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 போன். மேலும் 2400X1080 பிக்சல்ஸஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி இதில் உள்ளது.

ஆகஸ்ட் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo போன்..

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 ( Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது. குறிப்பாக அட்ரினோ (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

Zeiss கேமரா சென்சார் உடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும். அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ வி40. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

விவோ வி40 ப்ரோ அம்சங்கள் (Vivo V40 pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 2400X1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் ( Dimensity 9200+) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவரும். 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என வேரியண்ட்களில் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

ஆகஸ்ட் 7 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Vivo போன்..

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டு விவோ வி40 ப்ரோ அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

குறிப்பாக விவோ வி40 ப்ரோ மற்றும் விவோ வி40 ஸ்மார்ட்போன்கள் ரூ.45,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ வி40 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 Series will be launched in India on August 7:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X