Home
Mobile

ஆர்டர் பொளக்கும்! ரூ.17000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்தியாவில் விவோ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் ஃபிளிக்கர் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் மற்றும் லெதர் பேக் பேனல் கொண்ட விவோ வி40 எஸ்இ 4ஜி (Vivo V40 SE 4G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த விவோ போனின் விலை, விற்பனை, முழு பீச்சர்கள் இதோ.

விவோ வி40 எஸ்இ அம்சங்கள் (Vivo V40 SE Specifications): இந்த விவோவில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு பிளாட் டிஸ்பிளே மாடலாகும்.

ஆர்டர் பொளக்கும்! ரூ.17000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா போன்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (FunTouch OS 14) வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் (Octa Core Snapdragon 685 6nm) சிப்செட் வருகிறது. இந்த விவோ வி40 எஸ்இ போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுல் ரேம்) + 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card Slot) வருகிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த விவோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா + ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் அல்ட்ரா எச்டி இமேஜிங் சிஸ்டம் (ULTRA HD IMAGING SYSTEM) சப்போர்ட் உள்ளது. மேலும், பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait), டூயல் வியூ வீடியோ (Dual-View Video), ஸ்டைலிஷ் நைட் ஃபில்டர்கள் (Stylish Night Filters) வருகின்றன.

ஆர்டர் பொளக்கும்! ரூ.17000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா போன்!

இந்த விவோ வி40 எஸ்இ போனில் பக்காவான பேட்டரி சிஸ்டம் வருகிறது. 80W ரேபிட் சார்ஜிங் சாப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த விவோவில் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வருகிறது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) வருகின்றன. 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை (Wi-Fi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் குளோபல் மார்கெட் மற்றும் செக் குடியரசில் வெளியாகி இருக்கிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,996ஆக இருக்கிறது. இதே விலையில் இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவோ வி40 எஸ்இ போனில் கிரிஸ்டல் பிளாக் (Crystal Black), லெதர் பர்பிள் (Leather Purple) ஆகிய 2 கலர்களில் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 SE 4G With 50MP Camera, 8GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X