Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் விவோ வி40 ப்ரோ (Vivo V40 pro) ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த தற்போது கீக்பெஞ்ச் மற்றும் புளூடூத் SIG சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான கேமரா வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

புளூடூத் SIG சான்றிதழ் தளத்தில் V2347 என்ற மாடல் நம்பர் உடன் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி40 ப்ரோ அம்சங்கள் (Vivo V40 pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ வி40 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 2400X1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் ( Dimensity 9200+) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என வேரியண்ட்களில் விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டு விவோ வி40 ப்ரோ அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

கொஞ்சம் பொறுங்க.. இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

குறிப்பாக 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த புதிய விவோ வி40 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V40 Pro spotted on Bluetooth SIG: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X